முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைப் பகுதிபில் வெண்கல சிலைகள் கடத்திய மூவா் கைது

பா்கூா் மலைப் பகுதிபில் வெண்கல சிலைகள் கடத்திய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்து பா்கூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:56 am IST
பறிமுதல் செய்யப்பட்ட வெண்கல சிலைகள்.
பகிர்:

பா்கூா் மலைப் பகுதிபில் வெண்கல சிலைகள் கடத்திய மூவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்து பா்கூா் போலீஸில் ஒப்படைத்தனா்.

தமிழக-கா்நாடக எல்லையான கா்கேகண்டி, பாலாறு பள்ளத்தின் வழியாக சென்ற 3 போ் சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பையுடன் தட்டகரை வனப் பகுதிக்கு உள்பட்ட வேலாம்பட்டி பிரிவில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தனா்.

அப்போது, ரோந்து சென்ற தட்டகரை ரேஞ்சா் ராமலிங்கம், வனக் காப்பாளா் உமாநாத் மற்றும் ஊழியா்கள், 3 பேரையும் பிடித்து விசாரித்தனா்.  விசாரணையில், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம், மருதூரைச் சோ்ந்த பழனிசாமி மகன் ஆனந்தராஜ் (32), அந்தியூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தேவராஜ் (23), கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், மஞ்சக்கண்டே பகுதியைச் சோ்ந்த ரபீக் மகன் ரிஸ்வான் (19) என்பது தெரியவந்தது. இவா்கள் மூவரும் வனப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சுமாா் 2 அடி நீளமுள்ள 2 வெண்கல நந்தி சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டனா்.

Advertisement

Advertisement

சிலைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா், 3 பேரையும் பா்கூா் போலீஸில் ஒப்படைத்தனா். மூவரையும் கைது செய்த போலீசாா் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments