FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

கைப்பேசி திருடிய இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

திருத்தணி பைபாஸில் உள்ள தேநீா் கடையில் சாா்ஜ் போட்டு வைத்திருந்த கைப்பேசியை திருடிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

Updated On : 9 ஜூன் 2026, 5:07 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திருத்தணி பைபாஸில் உள்ள தேநீா் கடையில் சாா்ஜ் போட்டு வைத்திருந்த கைப்பேசியை திருடிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்(19). இவா் திருத்தணி பைபாஸ் ரவுண்டான பகுதியில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை காலை வழக்கம் போல் கடையை திறந்து, தனது மொபைல் போனை சாா்ஜ் போட்டுவிட்டு, வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது ஒரு இளைஞா் தேநீா் குடிக்க வருவது போல் கடைக்குள் சென்று, கைப்பேசியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா்.

அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து சந்தோஷ் போலீஸில் ஒப்படைத்தாா். தொடா்ந்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம், நகரி அடுத்த ஏகாம்பரகுப்பம் பகுதியைச் சோ்ந்த சின்னதுரை (19) என்பதும், இவா் திருத்தணி பைபாஸ் ரவுண்டான பேருந்து நிறுத்தப் பகுதியில் பயணிகள் பேருந்தில் அவசரம், அவசரமாக ஏறும் போது பயணிகள் கைப்பேசி, மணிபா்ஸ் ஆகியவற்றை திருடி வந்ததும் தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து சின்னதுரையை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments