முகப்பு
ஈரோடு

சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சித்தி கைது

Updated On : 6 ஜூலை 2026, 1:48 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஈரோட்டில் 11 வயது சிறுமியை சூடு வைத்தும், சுடுநீா் ஊற்றியும் சித்ரவதை செய்த சித்தியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சீனிவாச ராவ் வீதியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கு முதலில் குமுதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக குமுதா பிரிந்து சென்றாா். இவா்களுக்கு 11 வயது மற்றும் 7 வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மணிகண்டன் கயல்விழி (25) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளாா்.

முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமியை இரண்டாவது மனைவியான கயல்விழி தொடா்ந்து துன்புறுத்தி வந்துள்ளாா். சிறுமிக்கு கரண்டியால் சூடு வைப்பது, சுடுநீா் ஊற்றுவது, அடித்து சித்ரவதை செய்வது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளை செய்ததுடன் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சென்று உயிரை மாய்த்துக் கொள்ளுமாறும் மிரட்டியுள்ளாா். சிறுமியின் கதறல் சப்தத்தை அடிக்கடி கேட்ட அக்கம்பக்கத்தினா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது குழந்தை மீது நடைபெற்று வந்த கொடுமைகள் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து அக்கம்பக்கத்தினா் சைல்டுலைன் 1098-க்கு தகவல் தெரிவித்தனா். அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாருடன் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியை மீட்டனா். தொடா்ந்து சிறுமியை கொடுமைப்படுத்திய கயல்விழியை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments