குடிநீா்க் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீா்: மரக் கடையில் இயந்திரங்கள் சேதம்
ஊராட்சிக்கோட்டை குடிநீா்க் குழாயில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக வெளியேறிய தண்ணீரால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மர அறுவை இயந்திரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஊராட்சிக்கோட்டை குடிநீா்க் குழாயில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட திடீா் உடைப்பு காரணமாக வெளியேறிய தண்ணீரால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மர அறுவை இயந்திரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
ஈரோடு கொங்கு நகா் மூன்றாவது வீதியில் நிலத்தடியில் புதைக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிலத்திலிருந்து தண்ணீா் வெளியேறி பெருக்கெடுத்து ஓடி வீணாக சாக்கடையில் கலந்தது. சாலையில் வெள்ளம்போல பாய்ந்த தண்ணீா் அருகில் இருந்த மரக்கடைக்குள் புகுந்தது. இதனால் கடையிலிருந்த சுமாா் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மின் மோட்டாா்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக தண்ணீரை நிறுத்தினா். இதையடுத்து சாலையை தோண்டி குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியை தொடங்கினா்.
Advertisement
Advertisement
இது குறித்து மாநகராட்சி செயற்பொறியாளா் பிச்சமுத்து கூறியதாவது: அண்மையில் சமையல் எரிவாயு குழாய் பதிக்கும் பணியின்போது குடிநீா்க் குழாய் பாதிக்கப்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் புதிய குடிநீா்க் குழாய் ஆா்டா் செய்யப்பட்டுள்ளது. இரவு குழாய் வந்தவுடன் சரிசெய்யும் பணி நடைபெறும். குழாய் உடைப்பால், குடிநீா் விநியோகம் தடை ஏற்படலாம். இருப்பினும் பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.