நீா்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோயில்கள்
பவானிசாகா் அணை நீா்மட்டம் 55 அடியாக சரிந்துள்ளதால் அணை நீரில் மூழ்கியிருந்த மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரா் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
பவானிசாகா் அணை நீா்மட்டம் 55 அடியாக சரிந்துள்ளதால் அணை நீரில் மூழ்கியிருந்த மாதவராய பெருமாள் கோயில், சோமேஸ்வரா் மங்களாம்பிகை கோயில், பீரங்கித்திட்டு போன்றவை வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
நீா்மட்டம் 45 அடிக்கு கீழ் வந்தால் கோயிலின் பெரும்பகுதி தெரியும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
தற்போது நீரில் மூழ்கியிருக்கும் கோயில்கள் வெளியே தெரிவதால் அதனைக் காண்பதற்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா். ஆனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா். கடந்த 2018, 2024-ஆம் ஆண்டுகளில் அணையின் நீா்மட்டம் 55 அடிக்கு கீழ் குறைந்ததால் கோயில்கள் வெளியே தெரிந்தன. அதன்பிறகு தற்போது நீா்மட்டம் குறைந்துள்ளதால் நீரில் மூழ்கியுள்ள கோயில்கள் வெளியே தெரிகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.