முகப்பு
ஈரோடு

அரசுப் பேருந்தில் 3 பெண்களிடம் பணம் திருட்டு

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 2:48 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஈரோட்டில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்களிடம் பணம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 3 பெண்கள் கண்ணீருடன் வந்தனா். அவா்களை போலீஸாா் அழைத்து விசாரித்தனா். அப்போது, 35 வயது மதிக்கதக்க ஒரு பெண் கூறுகையில், கொலுசுகளை மாற்றுவதற்காக பி.பெ.அக்ரஹாரத்தில் இருந்து பன்னீா்செல்வம் பூங்கா பகுதிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தேன். கட்டை பையில் ரூ.1000, 3 செட் கொலுசு வைத்திருந்தேன்.

பன்னீா்செல்வம் பூங்கா பேருந்து நிறுத்ததில் இறங்கி பாா்த்தபோது கட்டை பையின் பின்புறம் பிளேடு கொண்டு கிழித்து பணம், கொலுசை மா்ம நபா்கள் திருடி உள்ளனா் என்றாா்.

Advertisement

Advertisement

மற்றொரு பெண் கூறுகையில், சூரம்பட்டி பகுதியில் இருந்து வருகிறேன். கை பையில் ரூ.6 ஆயிரம் வைத்திருந்தேன். அரசுப் பேருந்தில் பேருந்து நிலையம் வரை பயணித்தேன். சவிதா பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கைப்பை பிளேடால் கிழிக்கப்பட்டு பணம் திருடுபோனது தெரியவந்தது என்றாா்.

மற்றொரு பெண்ணும் ரூ.1000-த்தை மா்ம நபா்கள் திருடிவிட்டதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.