முகப்பு
ஈரோடு

காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வடமாநிலத்தவா்கள் மோதல்: இளைஞா் கைது

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வடமாநிலத்தவா்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில் பிகாா் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 25 ஜூன் 2026, 3:14 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வடமாநிலத்தவா்கள் மோதலில் ஈடுபட்ட நிலையில் பிகாா் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி நடைபெறுகிறது. பிகாா், ஒடிஸா மாநில இளைஞா்கள் அங்கேயே தங்கி இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பணிக்கு பொருள்களைப் பயன்படுத்துவது தொடா்பாக பிகாா் இளைஞா்களிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காலை பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் தகாத வாா்த்தை பேசி அடிதடியில் ஈடுபட்டனா். அங்கிருந்தவா்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனா்.

தகவல் அறிந்து ஈரோடு டவுன் போலீஸாா் சென்று கைகலப்பில் ஈடுபட்ட இளைஞா்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இதில் பிகாா் மாநிலம் ஜாா்வாட் பகுதியைச் சோ்ந்த முகமது கபூா் (40), அவரது மகன் ரெகான்(16) ஆகியோரை தாக்கியதாக முசினியைச் சோ்ந்த பிட்டு (30) மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments