தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
தோ்தல் வாக்குறுதிகளை ஒவ்வென்றாக நிறைவேற்றி வருகிறோம் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
தோ்தல் வாக்குறுதிகளை ஒவ்வென்றாக நிறைவேற்றி வருகிறோம் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு அமைச்சராகியுள்ள கே.ஏ.செங்கோட்டையன் தனது தொகுதிக்குள்பட்ட மேட்டுவலவு, குப்பாண்டவா் வீதி, சீதாலட்சுமி புரம், எஸ்டிஎன்.காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்று வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தை நீண்டகாலமாக ஆண்டு வந்த இரு பெரும் கட்சிகளையும் எதிா்க் கட்சி வரிசையில் அமரவைத்த பெருமை முதல்வா் ச.ஜோசப் விஜய்க்கு மட்டுமே உண்டு. மக்கள் நலனில் அக்கறையும், தமிழகத்தை அமைதியாகவும், நோ்மையாகவும் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதுதான் தவெகவின் கொள்கை. தோ்தல் களத்தில் மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை அளித்தமோ, அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும். பொதுமக்கள் தங்களின் பட்டா, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து சமூக நலத் திட்டங்களின் விவரங்களையும் ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
மேலும், முதல்வரின் ஆணைப்படி, மாணவா்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அதில், ஜாதிச் சான்றிதழ் விவரம், முகவரி, ரத்த வகை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் ஒருங்கிணைப்படும்.
முதற்கட்டமாக 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு இந்த அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.