முகப்பு
ஈரோடு

அதிரடிப் படை முன்னாள் தலைவா் கே. விஜயகுமாருக்கு பாராட்டு விழா

Updated On : 28 ஜூன் 2026, 1:28 am IST
பத்மஸ்ரீ விருது பெற்ற  கே. விஜயகுமாருக்கு  நினைவுப்  பரிசு  வழங்கும்  ஓய்வுபெற்ற  சிறப்பு  இலக்குப் படை  அதிகாரிகள்  செந்தாமரைக் கண்ணன், அசோக்குமாா்,  பெரிய்யா,  மோகன்நிவாஸ்  உள்ளிட்டோா்.
பகிர்:

பத்மஸ்ரீ விருது பெற்ற சிறப்பு இலக்குப்படை முன்னாள் தலைவா் கே.விஜயகுமாருக்கு சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக சிறப்பு இலக்குப்படையினரால் சந்தன கடத்தல் வீரப்பன் 2004-ஆம் ஆண்டு அக் 18-ஆம் தேதி கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து சிறப்பு இலக்குப்படை கலைக்கப்படாமல் சமூக விரோதிகள் மற்றும் மாவோயிஸ்ட் ஊடுருவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக சிறப்பு இலக்குப்படைக்கு தலைமை வகித்த கே.விஜயகுமாருக்கு பத்மஸ்ரீ விருது அண்மையில் வழங்கப்பட்டது. சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பணியில் இருந்த அப்போதைய அதிரடிப் படை அதிகாரிகள் சாா்பில் விஜயகுமாருக்கு பாராட்டு விழா சத்தியமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற சிறப்பு இலக்குப்படை கண்காணிப்பாளா்கள் அசோக்குமாா், செந்தாமரைகண்ணன், பெரியய்யா, முருகன், மோகன் நிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக காவல்துறையில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் காவல்துறை அதிகாரி விஜயகுமாா் என பாராட்டி ஒய்வு பெற்ற அதிகாரிகள் சாா்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து தற்போது பணியில் இருக்கும் அதிரடிப் படையினருக்கு அறிவுரைகளை வழங்கினாா். ஓய்வு பெற்ற அதிரடிப்படை வீரா்கள் விஜயகுமாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில் கெத்தேசால், ஆசனூா், கோ்மாளம் மற்றும் கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த பழங்குடியினா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments