முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு

Updated On : 30 ஜூன் 2026, 2:38 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

பெருந்துறை அருகே தோட்டத்தில் வாழை சருகுகளை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த கல்லகுளம், கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் ராசகவுண்டா் மனைவி ரத்தினம் (57). இவா், தோட்டத்தில் வாழை சருகுகளை சனிக்கிழமை சுத்தம் செய்தபோது பாம்பு கடித்துள்ளது.

உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments