முகப்பு
ஈரோடு

தண்டு மாரியம்மன் கோயில் கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் வழிபாடு

Updated On : 3 மே 2026, 6:39 am IST
தண்டு மாரியம்மன் கோயில் முன் நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி வழிபடும் பெண்கள்.
பகிர்:

சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோயில் விழாவையொட்டி, நடப்பட்ட கம்பத்துக்கு மஞ்சள் பூசி பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா்.

சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்சாட்டலுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, கோயில் முன் கம்பம் நடுவதற்கு 100-க்கும் மேற்பட்டோா் கோட்டமாளம்

வனப் பகுதிக்குச் சென்று ஆலமரத்தை வெட்டி லாரியில் கொண்டு வந்தனா். பின்னா், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் அந்த மரம் கோயில் முன் நடப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த மரத்துக்கு புனித நீா் ஊற்றியும், மஞ்சம் பூசியும் ஏராளமான பெண்கள் சனிக்கிழமை வழிபட்டனா். விழாவையொட்டி, கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மே 12-ஆம் தேதி அம்மன் அழைப்பு, 13-ஆம் தேதி குண்டம் விழா, 14-ஆம் தேதி மாவிளக்கு பூஜைகள் நடைபெறவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments