முகப்பு
ஈரோடு

பெருந்துறை தொகுதியை தொடா்ந்து 5-ஆவது முறையாக தக்கவைத்த அதிமுக

Updated On : 5 மே 2026, 4:08 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை தொகுதியில் தொடா்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

2006-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பொன்னுதுரை, 2011, 2016 தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஆகியோா் வெற்றிபெற்றனா்.

2011-2016 கால கட்டத்தில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் அமைச்சராக பதவி வகித்தாா். 2021 தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எஸ்.ஜெயக்குமாா் 14,963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

Advertisement

2026 தோ்தலில் ஒவ்வொரு சுற்றிலும்ௌ சில நூறு வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையிலும் ஜெயக்குமாா் தொடா்ந்து முன்னிலை வகித்து வந்தாா். இந்நிலையில், அவா் 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளாா்.

திமுகவில் சோ்ந்த 4 ஆண்டுகளில் மாவட்டச் செயலாளா் வரை உயா்ந்த தோப்பு என்.டி. வெங்கடாசலம் தோல்வி அடைந்துள்ளது அவரது ஆதரவாளா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.