ஈரோடு ரயில் நிலையம் அருகே 80 கஞ்சா சாக்லேட் பறிமுதல்
ஈரோடு ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 80 கஞ்சா சாக்லேட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையம் அருகே கேட்பாரற்று கிடந்த 80 கஞ்சா சாக்லேட்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு ரயில் நிலையம் பழைய குடியிருப்பு பகுதியில் ஈரோடு தெற்கு போலீஸாா் புதன்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் ரூ.22,500 மதிப்பிலான 450 கிராம் எடை கொண்ட 80 கஞ்சா சாக்லேட் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கஞ்சா சாக்லேட்டை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.