நீலகிரி

பசுந் தேயிலைக்கு விலை நிர்ணயம்

DIN

பசுந் தேயிலைக்கு டிசம்பர் மாத  விலையாக, 12  ரூபாய் 50 காசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய தேயிலை வாரியம்  அறிவித்துள்ளது. 
இது தொடர்பாக தென்னிந்திய  தேயிலை வாரியம் வெளியிட்ட செய்திக்  குறிப்பு:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் பசுந் தேயிலைக்கு டிசம்பர்  மாதத்துக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையாக, கிலோவுக்கு, 12   ரூபாய்  50 காசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் ஆகியோர், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT