நீலகிரி

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு உதகையில் இலவசப் பயிற்சி வகுப்புகள்

DIN

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுக்காக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்துள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்குத் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்தேர்வு, ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தத் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உதகை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலமாக இலவசப் பயிற்சி வகுப்புகள் மார்ச் 26-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று அனைவரும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பை மட்டும் நம்பிக் காத்திராமல் இத்தகையத் தேர்வுகளையும் எழுதி தகுதித் தேர்வில் வெற்றி பெற அளிக்கப்பட்டுள்ள இவ்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT