முகப்பு
நீலகிரி

குந்தா, எமரால்டு அணைகளில் படகு சவாரி தொடங்க கோரிக்கை

குந்தா, எமரால்டு அணைகளில் சிறுவர்களுக்கான படகு சவாரி தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Updated On : 5 ஏப்ரல் 2018, 6:58 am IST
பகிர்:

குந்தா, எமரால்டு அணைகளில் சிறுவர்களுக்கான படகு சவாரி தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகிலுள்ள அப்பர்பவானி, கிண்ணக்கொரை, அன்னமலை, அவலாஞ்சி, எமரால்டு, பென்ஸ்டாக் உள்ளிட்ட பகுதிகள் குந்தா பகுதியின் சுற்றுலாத் தலங்களாக உள்ளன. வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிகளுக்குச் சென்று இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதிகளை சுற்றுலாப் பகுதியாக அறிவித்து சுற்றுலா மேம்பாட்டுக்கான எந்த வித நடவடிக்கைகளும் அரசு, மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் இதுவரை எடுக்கவில்லை. 
அவலாஞ்சி பகுதியில் மட்டும் வனத் துறை சார்பில் சூழல் சுற்றுலா மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குந்தா, எமரால்டு அணைகளில் சிறுவர்களுக்கான படகு சவாரி தொடங்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
பைக்கார அணையில் உள்ளதுபோல் குந்தா, எமரால்டு அணைகளில் படகு சவாரி தொடங்கும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, தேயிலை விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மஞ்சூர், அதன் சுற்றுப்புற பகுதிகள் இதன் மூலம் வளர்ச்சி பெறஅதிக வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments