10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு: நீலகிரியில் 8,209 பேர் பங்கேற்பு
நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் 8,209 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் 8,209 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.
தமிழகத்தில் நடைபெற்றுவரும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் தேர்வில் 8,209 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 112 பேர் தேர்வெழுத வரவில்லை.
தனித்தேர்வர்களைப் பொருத்தமட்டில் தேர்வெழுத வேண்டிய 252 பேரில் 242 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். 10 பேர் தேர்வெழுதவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று 46 மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.