பந்தலூர் அருகே யானைகள் தாக்கியதில் வீடு சேதம்
நீலகிரி மாவட்டம், பந்தலூர்அருகே சேரம்பாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், பந்தலூர்அருகே சேரம்பாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி சேதப்படுத்தின.
பந்தலூர் வட்டம், சேரங்கோடு ஊராட்சிக்கு உள்பட்ட மழவன் சேரம்பாடி கிராமத்துக்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நுழைந்தன.
பின்னர் அவை, அப்பகுதியில் உள்ள ராஜவேல் என்பவரது வீட்டை சுற்றிவளைத்து தாக்கின. சப்தம் கேட்டு ராஜவேல் குடும்பத்தினர் வெளியே எட்டிபார்த்தபோது, வீட்டை யானைகள் சூழ்ந்து இடிப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் உதவிகேட்டு சப்தமிட்டதில், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து யானையை விரட்டியதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.