நீலகிரி

மாவோயிஸ்டுக்கு செப்டம்பர் 12 வரை நீதிமன்றக் காவல்

DIN

கைதான மாவோயிஸ்ட் டெனிஸை செம்படம்பர் 12 ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் அடைக்க  உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் கடந்த 2016 ஆம்  ஆண்டு ஏழு மாவோயிஸ்ட்கள் நுழைந்து வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிச் சென்றனர். இது குறித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 
இந்த நிலையில், கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த டேனிஷ் (என்கிற) கிருஷ்ணனை கடந்த ஆண்டு போலீஸார் கைது செய்து கேரள சிறையில் அடைத்தனர்.
இவர் கொலக்கம்பை ஆதிவாசி கிராமத்துக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கேரள சிறையில் அடைக்கப்பட்டிருந்த டேனிஷை திருச்சூர் போலீஸார் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தினார். 
அப்போது, மவோயிஸ்ட் டெனிஸை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக போலீஸார் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, மனுவை ஏற்ற நீதிபதி வடமலை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணை முடிவடைந்து உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் டெனிஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT