குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வாகனம் விபத்து
கோவையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் விபத்துக்குள்ளானதில் இருவர் ஞாயிற்றுக்கிழமை படுகாயடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
குன்னூர்: கோவையில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த வேன் விபத்துக்குள்ளானதில் இருவர் ஞாயிற்றுக்கிழமை படுகாயடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கோவை, ராஜவீதியில் உள்ள தனியார் சூட்கேஷ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் 20 பேர் வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள், ஊர் திரும்பும் வழியில் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கே.என்.ஆர். பகுதியில் வேன் நிலைத்தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இவ்விபத்தில், வேனில் பயணித்த 20 பேரில் 11 பேர் காயடைந்தனர்.
இதில், முகமது அனாஸ் (16) , சதாம் (27 ஆகியோருக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் ஓட்டுநர் சரவணகுமாரிடம் நடைபெற்ற விசாரணையில், சுற்றுலா வந்த அனைவரும் கோவையில் தங்கி பணிபுரியும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.