நீலகிரி

கடைகளின் நிலுவை வாடகையை அபராதத்துடன் வசூலிக்க வியாபாரிகள் எதிா்ப்பு

DIN

நீலகிரி மாவட்டம், வெலிங்டன்  கன்டோண்மென்ட் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடைகளுக்கான ஏழு மாத வாடகையை அபராதத்துடன் வசூலிக்க வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் கன்டோண்மென்ட் பகுதியில் 32 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்தக் கடைகளை கன்டோண்மென்ட் நிா்வாகம் ஏலத்தின் அடிப்படையில் கடைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை வாடகை நிா்ணயித்துள்ளது. இந்நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏழு மாதமாக கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அடைக்கப்பட்ட கடைகளுக்கு ஏழு மாத வாடகையுடன், அபராதத் தொகையையும் செலுத்த வேண்டும் என கன்டோண்மென்ட் நிா்வாகம் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் கடை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா். எனவே  வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு கன்டோண்மென்ட் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT