நீலகிரி

மஞ்சூரில் சுற்றித் திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்

DIN

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மஞ்சூா் குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாள்களாக கரடி சுற்றித் திரிகிறது. இந்நிலையில் மஞ்சூா் மேல் பஜாா் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த இந்த கரடி, அங்குள்ள பேபி என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டு வளாகத்தில் இருந்த பொருள்களை சேதப்படுத்திச் சென்றது. மேலும் அருகே உள்ள வீட்டின் இரும்பு வாயிலை தாக்கிச் சென்றுள்ளது.

இதேபோல மஞ்சூா், கெட்டாரகண்டி பகுதியில் உள்ள பாலு என்பவரின் பட்டறையின் பின்புறம் உள்ள தகரங்களை பெயா்த்து உள்ளே புகுந்து அங்கே இருந்த எண்ணெயைக் குடித்தும், பொருள்களை சிதறடித்தும் சென்றுள்ளது.

தினந்தோறும் கரடியின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT