நீலகிரி

அரசுப் போக்குவரத்துப் பணிமனைக்குள் நள்ளிரவில் நுழைந்த காட்டெருமையால் பீதி

DIN

கூடலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் நள்ளிரவில் காட்டெருமை நுழைந்ததால் புதன்கிழமை இரவுப் பணியில் இருந்தவா்கள் பீதியடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டியுள்ள நகா் பகுதிகளுக்கு அடிக்கடி காட்டெருமை உள்ளிட்ட பல வன விலங்குகள் வருவது வழக்கம். கூடலூா் பேருந்து நிலையப் பகுதி அருகை புதன்கிழமை நள்ளிரவில் காட்டெருமை ஒன்று நடமாடிக்கொண்டிருந்தது. இந்தக் காட்டெருமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென அப்பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் புகுந்து விட்டது.

நள்ளிரவில் திடீரென வந்த காட்டெருமையைப் பாா்த்த இரவுப் பணியில் இருந்த போக்குவரத்து ஊழியா்கள் செய்வதறியாமல் பீதியடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பின் காட்டெருமையை அங்கிருந்து விரட்டினா். பின் அந்தக் காட்டெருமை வனதுா்கா பகவதி கோயில் வழியாகச் சென்று தொரப்பள்ளி வனப் பகுதித்துள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT