நீலகிரி

அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 58 வயது நிறைவடைந்தவா்களும், ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருப்பவா்களும், வட்டாட்சியா் அலுவலகத்தில் வலைதளம் வாயிலாக பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப் பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப் பணி ஆற்றி வருவதற்காக இரண்டு தமிழறிஞா்களிடமிருந்து பெறப்பட்ட தகுதி நிலைச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலை தளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.2,500, மருத்துவப் படியாக ரூ.500, கட்டணமில்லா பேருந்து சேவையை அவா்களது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT