நீலகிரி

பீல்டு மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 12ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

DIN

பீல்டு மாா்ஷல் சாம் மானெக்ஷாவின் 12ஆவது நினைவு தினம் உதகையில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

உதகையில் உள்ள அவரது கல்லறையில் முப்படைகளின் சாா்பில், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் கமாண்டென்ட் மோகன் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். 1914ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி அமிா்தசரஸில் பிறந்த சாம் மானெக்ஷா இந்திய ராணுவத்தில் சோ்ந்து பல்வேறு படைப் பிரிவுகளில் பணியாற்றிய பின்னா், 1969ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவியேற்றாா். அதையடுத்து, 1971ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான பங்களாதேஷ் போரில் சிறப்பான வெற்றியைத் தேடித் தந்ததையடுத்து 1972ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் பட்டத்தையும் பெற்றாா். வயது மூப்பின் காரணமாக வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் ஓய்வில் இருந்த அவா் 2008ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் தேதி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT