நீலகிரி

உதகை நீதிமன்றத்தில் மாவோயிஸ்ட் ஷோபா ஆஜா்

DIN

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஷோபா உதகை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜா்படுத்தபட்டாா். அவரை மேலும் 30 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள நெடுகல்கொம்பை கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை ஒட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஷோபா என்ற மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஷோபாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி வடமலை ஷோபாவை, மேலும் 30 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பா் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT