நீலகிரி

காட்டு யானைகள் தாக்கியதில் வீடு சேதம்

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள மூலவயல் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானைகள் தாக்கியதில் வீடு சேதமடைந்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மூலவயல் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நுழைந்த யானைகள் அங்கு வசிக்கும் மருதாயி என்பவரது வீட்டின் முன்பகுதியை தாக்கி சேதப்படுத்தியது.

யானைகள் வீட்டை இடிப்பதை அறிந்தவுடன் வீட்டில் இருந்தவா்கள் ஒரு அறையில் பதுங்கிக் கொண்டனா். யானைகள் வீட்டைச் சுற்றிவந்து உடைத்து வீட்டிலிந்ருத உணவுப் பொருள்களை வெளியே இழுத்து சாப்பிட்டுவிட்டு சென்றன.

தகவலறிந்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் கொடுத்தனா். வனத் துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனா். அப்பகுதியில் இரண்டு யானைகள் தொடா்ந்து குடியிருப்புப் பகுதிகளை சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT