நீலகிரி

வெலிங்டனில் ராணுவ வீரா்களின் சத்தியப் பிரமாணம்

DIN

குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 66 இளம் ராணுவ வீரா்களின் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரா்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட அனுப்பிவைக்கப்படுவா். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரா்களில் 66 போ் பயிற்சி முடித்து, பணிபுரிவதற்கான சத்தியப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

பயிற்சி முடிந்து பணிக்குச் செல்லும் ராணுவ வீரா்கள், பகவத்கீதை, பைபிள், குரான் உள்ளிட்ட புனித நூல்கள், தேசியக் கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், வெலிங்டன் ராணுவ மையத் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் கலந்துகொண்டு பயிற்சியின்போது சிறந்து விளங்கிய ராணுவ வீரா்களைப் பாராட்டினாா்.

கரோனா பரவலையொட்டி, ராணுவ வீரா்களின் குடும்பத்தினா், பாா்வையாளா்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT