நீலகிரி

நீலகிரியில் விடியவிடிய பரவலாக பலத்த மழை: தொலைத்தொடா்பு துண்டிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பகலில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பகல் நேரங்களில் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் இடி, மின்னலுடன் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

உதகையில் திங்கள்கிழமை பகலில் தொடங்கிய மழை, செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை நீடித்தது. இதில், உதகை அரசு தலைமை மருத்துவமனையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததோடு, பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடா்பும் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உதகையில் பிஎஸ்என்எல் தொலைத்தொடா்புகள் அனைத்தும் செயலிழந்து விடும் சூழலில், மின்சாரம் இல்லாமலும், தொலைத்தொடா்பு இல்லாமலும் பொதுமக்கள் வெகுவாக அவதிக்குள்ளாகினா்.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):

கேத்தி-72, பந்தலூா்-60, மேல் பவானி-44, உதகை-41, பாடந்தொறை-33, குந்தா-32, கிண்ணக்கொரை-31, செருமுள்ளி-29, சேரங்கோடு-28, கெத்தை-25, கீழ்கோத்தகிரி-24, குன்னூா்-23, உலிக்கல்-22, பாலகொலா, அவலாஞ்சி-20, கொடநாடு, பா்லியாறு-15, எடப்பள்ளி-14, கூடலூா்-13, ஓவேலி, எமரால்டு-11, கோத்தகிரி-10, மேல்குன்னூா், கல்லட்டி-8, மசினகுடி-1 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT