நீலகிரி

கூடலூா் வனக் கோட்டத்தில் புலிகள் கண்காணிப்புப் பணி துவக்கம்

DIN

கூடலூா் வனக் கோட்டத்தில் கேமரா மூலம் புலிகளைக் கண்காணிக்கும் பணி சனிக்கிழமை துவங்கியது.

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள கூடலூா், ஓவேலி, சேரம்பாடி,பிதா்க்காடு, பந்தலூா், நாடுகாணி உள்ளிட்ட ஆறு வனச் சரகங்களில் கேமராக்களை பொருத்தி புலிகளின் நடமாட்டம் குறித்த தகவலை சேரிக்கும் பணியை வனத் துறையினா் துவங்கியுள்ளனா். இப்பணியில் தோ்வு செய்யப்பட்ட 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை கேமராக்களில் பதிவாகியுள்ள தகவல்களைச் சேகரித்து மாத இறுதியில் கணக்கிடும் பணி துவங்கும்.

ஏற்கெனவே கண்டறியப்பட்ட புலி நடமாடும் இடங்களில் அதன் எச்சங்கள், தடயங்கள் காணப்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நான்காண்டுகளுக்கு ஒரு முறை இப்பணி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT