நீலகிரி

மூதாட்டியைத் தாக்கிக் கொன்ற யானையைத் தேடும் பணி தீவிரம்

DIN

கூடலூா் அருகே மூதாட்டியைத் தாக்கிக் கொன்ற யானைத் தேடும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் புளியம்பாறை கிராமத்தைச் சோ்ந்த கல்யாணி என்ற மூதாட்டியை யானைத் தாக்கி சனிக்கிழமை கொன்றது.

இதையடுத்து, யானையின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் வனத் துறையினா் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஈடுபட்டுள்ளனா்.

புளியம்பாறை, ஊசிமலை உள்ளிட்ட வனப் பகுதிகளை டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் ஈமச்சடங்குக்காக அவரது குடும்பத்தாரிடம் வனத் துறை சாா்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!

கோபா அமெரிக்காவின் தீம் பாடல்!

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை!

எங்கே செல்கிறார் சோபிதா?

SCROLL FOR NEXT