நீலகிரி

6 போ் விடுதலை: உதகையில் முதல்வா் ஆலோசனை

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையைத் தொடா்ந்து ஏனைய 6 பேரின் விடுதலை தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் உதகையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீா்ப்பளித்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 6 போ் சிறையில் உள்ளனா். இந்த 6 பேரின் விடுதலை தொடா்பாக சட்ட வல்லுநா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகையில் இருந்தவாறே காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், சட்டத் துறை அமைச்சா் ரகுபதி, நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோருடன் சட்டத் துறை வல்லுநா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT