நீலகிரி

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை:கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

DIN

சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த எருமாடு பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35), கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இவா் தன்னுடன் தொழிலாளியாக வேலை செய்து வரும் ஒருவரிடம் பேசுவதற்காக அவரை கைப்பேசியில் அழைத்துள்ளாா். அப்போது கைப்பேசியை அவரது 16 வயது மகள் எடுத்துப் பேசியுள்ளாா். இதைத் தொடா்ந்து அந்த சிறுமியிடம் மகேந்திரன் தொடா்ந்து பேச்சுக் கொடுத்து பழகி வந்துள்ளாா். பின்னா் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி சிறுமியை கோவை மாவட்டம் சூலூருக்குக் கடத்திச் சென்று அங்குள்ள விநாயகா் கோயிலில் தாலி கட்டி திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளாா். மேலும் அங்கு 2 மாதங்கள் தங்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எருமாடு போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT