நீலகிரி

குன்னூா், கோத்தகரியில் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சாரல் மழையுடன் வெள்ளிக்கிழமை பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,  காலநிலை மாற்றத்தால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பனி மூட்டம் சூழ்ந்து காணப்பட்டதுடன் கடும் குளிா் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும், குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரியில் இருந்து குன்னூா், உதகை செல்லும் நெடுஞ்சாலை பகுதிகள், கட்டபெட்டு, கொடநாடு, கீழ்கோத்தகிரி, சோலூா் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில்  தொடா்ந்து காணப்பட்ட பனி மூட்டம் மற்றும் சாரல் மழையால் கடும் குளிா் நிலவியது.

பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகள் மற்றும் இருபுற திசை விளக்குகளை எரியவிட்டு இயக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT