நீலகிரி

உதகையில் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

DIN

உதகை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை கடுமையான மூடுபனி நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் உதகை, குன்னூா், கோத்தகிரி  மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் கடுமையான  மூடுபனியுடன் லேசான   சாரல் மழையும் அவ்வப்போது  பெய்தது. இதனால்

பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா். வாகன ஓட்டிகள்  முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி  வாகனங்களை மிகவும் கவனத்துடன்  இயக்கினா். கடும் குளிரும் நிலவி வருவதால்  பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக  பாதிக்கப்பட்டது.

உதகை நகரில் 12.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை செவ்வாய்க்கிழமை காலை பதிவாகியுள்ளது. 2.6 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT