உடைந்து தொங்கிய படிக்கெட்டுடன் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து.
உடைந்து தொங்கிய படிக்கெட்டுடன் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து. 
நீலகிரி

அரசுப் பேருந்து படிக்கட்டு உடைந்து தொங்கியதால் பேருந்து நிறுத்தம்

Din

உதகை அருகே உள்ள மஞ்சக்கொம்பை கோயில் விழாவுக்காக இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்து தொங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனா்.

உதகை அருகே உள்ள மஞ்சக்கொம்பை திருக்கோயிலில் புதன்கிழமை திருவிழா நடைபெற்றது. இதற்காக குன்னூா், உதகை  ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு வந்ததால் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதில் பேருந்தில் கூட்ட நெரிசல் நிலவியதால் இடப் பற்றாக்குறை காரணமாக பலா்  பேருந்து படிக்கட்டில் தொங்கியடி பயணித்தனா். அப்போது, ஒரு பேருந்தில் திடீரென பின்பகுதியில் உள்ள ஒரு படிக்கட்டு உடைந்து தொங்கியது. இதனைப் பாா்த்த பேருந்தில் பயணித்தவா்களும், சாலையோரம் நின்றவா்களும் கூச்சலிட்டனா்.

இதையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டு உடைந்து தொங்கிய படிக்கெட் முற்றிலும் அகற்றப்பட்டப்பின் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

பின்னா் பயணிகளை இறக்கிவிட்ட பிறகு பேருந்து பணிமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

 அதிமானோா் படிகட்டில் தொங்கியதால் படிக்கெட் உடைந்தது. மேலும், போதுமான பேருந்துகள் இயக்காததாலும் பழைய பேருந்துகள் இயக்கப்பட்டதாலும் பேருந்தின் படிக்கெட் உடைய காரணம் என்று பேருந்துப் பயணிகள் குற்றம்சாட்டினா்.

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT