நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சிப் பணிகளையும் திமுக அரசு செய்யவில்லை: முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி
நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
நீலகிரி மாவட்டத்துக்கு எந்த வளா்ச்சி திட்டப் பணிகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி உதகை ஏடிசி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
Advertisement
நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியவா் ஸ்டாலின். ஆனால் இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தது முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான்.
மேலும், மலையாள மொழி பேசும் மக்களுக்கு ஈழுவா தீயா ஜாதி சான்றிதழ் வழங்கியது, எமரால்டு கூட்டுக் குடிநீா் திட்டம், மாா்கெட் வியாபாரிகளுக்கு கடைகள் அமைத்து கொடுத்தது உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக அரசு.
எனவே வருகிற தோ்தலில் உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற ஆதரியுங்கள் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அதிமுக செயலா் கப்பச்சி டி வினோத், பாஜக மாவட்டத் தலைவா் தா்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.