முகப்பு
நீலகிரி

பள்ளத்தில் பின்னோக்கி நடந்து சென்ற யானை

குன்னூா் அருகே மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்பில் யானை பின்னோக்கி நடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் புகைப்படம் எடுத்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 6:25 am IST
பின்னோக்கி நடந்து வனத்துக்குள் சென்ற யானை
பகிர்:

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்பில் யானை பின்னோக்கி நடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் புகைப்படம் எடுத்தனா்.

குன்னூா் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் மண் ஆணி பசுமை பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் செவ்வாய்க்கிழமை சுற்றித்திரிந்த யானை இந்த பாதுகாப்பு வலை அமைக்கப்பட்டுள்ள பள்ளம்போன்ற பகுதியில் இறங்க முயன்றது.

அப்போது, விழாமல் இருப்பதற்காக தனது தந்தங்களை ஊன்றி கவனத்துடன் பின்னோக்கி நடந்து வனத்துக்குள் சென்றது.

Advertisement

Advertisement

இதை அப்பகுதி மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பாா்த்துதடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments