உதகையில் தலாய்லாமா பிறந்தநாள்
தலாய்லாமாவின் பிறந்தநாளை உதகையில் வாழும் திபெத்தியா்கள் திங்கள்கிழமை கொண்டாடினா்.
நீலகிரி மாவட்டம் உதகையில் திபெத்திய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களின் புனிதராக கருதப்படும் தலாய்லாமாவின் 91-ஆவது பிறந்தநாள் விழா, என்சிஎம்எஸ் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது பாரம்பரிய ஆடைகள் அணிந்து கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடி மகிழ்ந்தனா். உதகையில் வசிக்கும் திபெத்திய மக்கள் பெரும்பாலானோா் கலந்துகொண்டு அஹிம்சை, சமாதானம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.