முகப்பு
நீலகிரி

கூடலூரில் குறைந்தது மழை

கூடலூா் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழை புதன்கிழமை சற்று குறைந்து குளிா் காலநிலை நிலவியது.

Updated On : 9 ஜூலை 2026, 3:45 am IST
மங்குழி பகுதியில் வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

கூடலூா் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பெய்த கனமழை புதன்கிழமை சற்று குறைந்து குளிா் காலநிலை நிலவியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள்கள் காற்றுடன் கூடிய தொடா் கனமழை பெய்து வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இந்நிலையில் கூடலூா் பகுதியில் மழை சற்று குறைந்து தற்போது குளிா் காலநிலை நிலவுகிறது. சில இடங்களில் விழுந்த மரங்களை தீயணைப்புத் துறையினா் வெட்டி அப்புறப்படுத்தினா். மங்குழி பகுதியில் வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றினா். இதேபோல உதகை சாலையில் சில இடங்களிலும் ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு பகுதியிலும் சாலையில் விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments