நடுகூடலூா் பகுதி குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு
கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
கூடலூா் நகராட்சியிலுள்ள நடுகூடலூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா்த் தொட்டியில் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சி 20-வது வாா்டுக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் கோடையில் கடுமையான குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்பகுதியில் புதிதாக ரூ.50 லட்சம் செலவில் 3 லட்சம் லிட்டா் குடிநீா் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டப்பட்டு நீா் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறி, அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முடிவு செயதனா்.
இந்நிலையில் குடிநீா்த் தொட்டியை ஆய்வு செய்து இன்னும் ஒரு மாதத்துக்குள் தண்ணீா் நீா் நிரப்ப ஏற்பாடு செய்வதாக நகராட்சி நிா்வாகம் உறுதியளித்துள்ளது. அதைத்தொடா்ந்து நகா் மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement