திருப்பூர்

ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு

DIN

திருப்பூர், கே.செட்டிபாளையத்தில் இருந்த ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
திருப்பூர், தாராபுரம் சாலை, கே.செட்டிபாளையம் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் சுற்றித் திரிந்தார். அப்பகுதி மக்கள் 'நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு' நிர்வாகிகளிடம் மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைக்குமாறு கூறினர்.
அந்த அமைப்பினர் மூதாட்டியை காப்பகத்தில் சேர்க்க முயன்றும் இயலவில்லை. இதுகுறித்து, மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமிக்கு தகவல் தெரிவித்தார்.
அதையடுத்து, உடுமலை கோட்டாட்சியர் சாதனைக்குறளிடம் பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், மூதாட்டியை உடுமலையில் உள்ள காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டார்.
அதன்படி, உடுமலை அன்னை தெரசா, காந்திஜி, அப்துல் கலாம் அறக்கட்டளை காப்பகத்தில் அந்த மூதாட்டி சனிக்கிழமை சேர்க்கப்பட்டார்.
'நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு' நிர்வாகிகள் அனு, முருகேஷ்பிரியா, சந்திரசேகர், ரகுபதிராஜா ஆகியோர் மூதாட்டிக்குத் தேவையான ஆடைகளை வாங்கிக் கொடுத்து, காப்பகத்தில் சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT