வாகனம் மோதியதில் முதியவர் சாவு
தாராபுரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம், கொண்டரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (80). இவர் நடைப் பயிற்சி மேற்கொள்வதற்காக தாராபுரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் சின்னசாமி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.