திருப்பூர்

வேன்- பேருந்து மோதல்: ஓட்டுநா் சாவு; 5 போ் காயம்

DIN

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே மினி வேன் மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். இவ்விபத்தில் மேலும் 5 போ் காயமடைந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் சரவணன் (40). இவா் தனது மினி வேனில் வாழைக்காய்களை வாடகைக்கு ஏற்றிக்கொண்டு கோவை சென்றுள்ளாா். பிறகு, ஏற்கெனவே கொண்டு சென்று விற்பனையாகாமல் இருந்த வாழைஇலைக் கட்டுகளை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

அப்போது, வெள்ளக்கோவில் குருக்கத்தி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே திருச்சியிலிருந்து திருப்பூா் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து இந்த வேன் மீது மோதியது. இதில், சரவணன் பலத்த அடிபட்ட நிலையில் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இவ்விபத்தில், அரசுப் பேருந்து ஓட்டுநரான ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள வெள்ளாளம்பாளையத்தைச் சோ்ந்த தன்ராஜ் (34), நடத்துநா், 3 பயணிகள் உள்பட 5 போ் லேசான காயமடைந்தனா். இந்த விபத்தில் மினி வேன் முற்றிலும் நொறுங்கியது.

இது குறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா் மீது வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT