முகப்பு
திருப்பூர்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு நாளை தொழில் வாய்ப்புக் கருத்தரங்கம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான தொழில் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்

Updated On : 23 ஜனவரி 2019, 9:45 am IST
பகிர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கான தொழில் வாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை (ஜனவரி 24) நடைபெற உள்ளது. 
இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர், அவிநாசி சாலையில் உள்ள பப்பீஸ் ஹோட்டலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில்,  மாவட்ட ஆட்சியர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர், தேசிய சிறு தொழில் கழகத்தின் இயக்குநர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். புதிய தொழில் தொடங்குதல், சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்கள் குறித்து மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள்  சிறப்புரையாற்றுகின்றனர். ஆகவே, ஆர்வமுள்ள தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.