வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி
வெள்ளக்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு காங்கயம் வட்டாட்சியர் மகேஷ்வரன் தலைமை வகித்துப் பேரணியைத் துவக்கி வைத்தார். தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி (ஜனவரி 25) இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளக்கோவில் துரை ராமசாமி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் புறப்பட்ட இப்பேரணி முத்தூர் சாலை வழியாக நான்கு சாலைச் சந்திப்பு வரை சென்று திரும்பியது. இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. வெள்ளக்கோவில் கிராம நிர்வாக அலுவலர் கெளரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.