முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 55  அரசுப் பள்ளிகள் செயல்படவில்லை

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 61 அரசு ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஜாக்டோ - ஜியோ

Updated On : 23 ஜனவரி 2019, 9:42 am IST
பகிர்:

வெள்ளக்கோவில் வட்டாரத்தில் 61 அரசு ஆரம்பப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்கச் சென்றதன் காரணமாக ஆசிரியர்கள் இல்லாமல் 55 ஆரம்பப் பள்ளிகள் செயல்படவில்லை.
தலா ஒரு ஆசிரியருடன் மூத்தாம்பாளையம், எல்.கே.சி. நகர், நம்பகவுண்டன்பாளையம், மலையாத்தபாளையம், தீத்தாம்பாளையம், சின்னமுத்தூர் ஆகிய 6 பள்ளிகள் மட்டும் செயல்பட்டன.
 ஆசிரியர் பயிற்றுநர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுப் பணி ஆசிரியர்களை வைத்து வகுப்புகள் நடைபெற ஆவன செய்யப்பட்டுள்ளதாக வெள்ளக்கோவில் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார்.
 வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 22 ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 20 ஆசிரியர்கள் பணிக்கு வந்திருந்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.