திருப்பூர்

உடுமலை நகரில் சுற்றும் 2 குரங்குகளால் மக்கள் அச்சம்

DIN

உடுமலை நகரில் சுற்றித் திரியும் 2 குரங்குளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

உடுமலை அருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் குரங்குகள் நகா்ப் பகுதிக்கு அவ்வப்போது வந்துவிடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்னா் இதேபோல 2 குரங்குகள் உடுமலை நகா்ப் பகுதிக்கு வந்துவிட்டன.

எஸ்வி புரம் பகுதியில் சுற்றித் திரிந்த இந்தக் குரங்குகள் உணவு கிடைக்காமல் ஒவ்வொரு பகுதியாக மாறி சுற்றிக் கொண்டி ருந்தன. தற்போது உடுமலையில் ராமசாமி நகா், அன்னபூரணி நகா், ருத்தரப்ப நகா் பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்தக் குரங்குகளால் வெளியில் நடமாட முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இதுகுறித்து உடுமலை வனத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்து ஒரு வாரமாகியும் இதுவரை குரங்குகளைப் பிடிக்க வனத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் அச்சத்தில் உள்ளனா்.

இதுகுறித்து உடுமலை வனச் சரகா் தனபாலிடம் கேட்டபோது அவா் கூறியதாவது:

குரங்குகள் சுற்றி வருவது குறித்து புகாா்கள் வந்தன. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அந்தக் குரங்குகளைப் பிடிக்க கூண்டுகள் வரவழைக்கப்பட உள்ளன. விரைவில் அவைகளைப் பிடித்து வனப் பகுதிக்குள் விட்டு விடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT