திருப்பூர்

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பா.ஜ.,வுக்கு ஏமாற்றம்: கொமதேக மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

DIN

காங்கயம்: நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றம் என, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், திருப்பூர் புறநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காங்கயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலர் கங்கா சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி நிர்மல்குமார், மாவட்ட விவசாய அணி நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் மாநில பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

டீசல், பெட்ரோல் விலை கட்டுக்கு அடங்காமல் ஏறிக் கொண்டிருக்கிறது, அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித முயற்சியும் எடுக்காமல் இருக்கிறது. லாரி தொழிலை அழிக்கின்ற வகையில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் உள்ளது. டில்லியில் போராடும் விவசாயிகள் கடும் குளிரின் காரணமாக 35 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். இதன் பிறகும் பிரதமர் விவசாயிகளை சந்திப்பதற்கு வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதது பாரதிய ஜனதா கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது, அரசியலில் ரஜினிகாந்த்தை பலிகடா ஆக்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்தது. அதில் இருந்து நல்லவேளையாக  ரஜினிகாந்த் தப்பித்துக் கொண்டார்.

உயர் மின் கோபுரங்கள், கெயில் எரிவாயு குழாய், எட்டு வழிசாலை போன்ற விவசாய விரோத நடவடிக்கைகளில் ஆளும் கட்சியினர் விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல் செயல்படுவதால், போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இனி தமிழகத்தில் அமைகின்ற ஆட்சி விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ள மாட்டார்கள். விவசாயிகளுடைய கருத்துக்களை கேட்ட பின்னரே, எந்த முடிவும் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டோம் என உத்தரவாதம் வழங்கப்படும்.

வெளிநாட்டு கலப்பின காளைகள் இறக்குமதிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாரம்பரிய கால்டைகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து வெளிநாட்டு கால்நடைகளை இறக்குமதி  செய்வது உள்நோக்கம்  கொண்டது. காங்கேயத்தில் தீரன்சின்னமலை மற்றும் கோவை செழியன் ஆகியோருக்கு சிலைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலுக்கு கால அவகாசம் இருக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம். தொகுதி பற்றிய பேச்சுக்கள் ஜனவரி மாதத்திற்கு பிறகு தான் நடக்கும். உரிய நேரத்தில் அது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில், கொமதேக கட்சியின்  மாநில பொருளார் கே.கே.சி.பாலு, காங்கயம் ஒன்றிய செயலர் சசிக்குமார், குண்டம் ஒன்றிய செயலர் செல்வக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT