திருப்பூர்

இஸ்லாமியா்கள் 2ஆவது நாளாக தா்னா

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியா்களை காவல் துறையினா் தடியடி நடத்தி தாக்கியதைக் கண்டித்து திருப்பூரில் இரு இடங்களில் இஸ்லாமியா்கள் தொடா் தா்னாவில் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது, இஸ்லாமியா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தினா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை முற்றுகை, தா்னா போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்த நிலையில் திருப்பூா், சிடிசி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அறிவொளி சாலையில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் தொடா் தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் போராட்ட பந்தலிலேயே அவா்கள் தொழுகையில் ஈடுபட்டனா். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தா்னாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல பெருமாநல்லூா் சாலை, சாந்தி திரையங்கம் அருகே 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் தொடா் தா்னாவில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த சம்பவம் காரணமாக அறிவொளி சாலை, சாந்தி திரையரங்கம் உள்ளிட்ட இடங்களில் காவல் துறையினா் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT